மரபுத் தமிழன்


This Space is owned by JJ Rushin, an awesome poet of his own style...Read him here and Read him More in http://camy-ungaliloruvan.blogspot.com/




ஓர் தமிழனின் தமிழ்த் தாய் வாழ்த்து


உறவுகொள்!!!

உறவுகொள் உறவுகொள்
உலகோடு உறவுகொள்
உன்னதமாய் உறவுகொள்
உலகோடு உறவுகொள்

கடலோடும் அலையோடும்
காற்றோடும் மலரோடும்
உறவுகொள்
இன்பத்தை உணர்ந்துகொள்ள
இயற்கையோடு உறவுகொள்

ஒலியோடும் ஒளியோடும்
விசையோடும் வினையொடும்
உறவுகொள்
அறிவியலை அறிந்துகொள்ள
நின் அறிவோடு நீயே உறவுகொள்

நித்திரையின் சுகமறிய
உழைப்போடு உறவுகொள்
வறுமையின் சுமையரிய
பசியோடு உறவுகொள்

மானோடும் உறவுகொள்
மீனோடும் உறவுகொள்
குயில் குரலில் நீ பட
மயில் போல நடமாட
குயிலோடும் உறவுகொள்
மயிலோடும் உறவுகொள்

நூலோடு உறவுகொள்ள
நின் நுண்ணறிவை உணர்ந்துகொள்
வேலோடு உறவுகொள்
உன் வீரமதை தெரிந்துகொள்

நட்பின் நலமறிய
நெஞ்சோடு நட்புகொள்
நட்போடு உன் நண்பனோடு உறவுகொள்

உறவுகொள் உறவுகொள்
உலகோடு உறவுகொள்
 
 
பாரதத் திருத்தேசமே


நற்வேதம் நாற்க் கொண்டு
இன்ன பிற நூற்க் கொண்டு
நுண்ணறிவு வளர்த்த தேசம்
பாரதத் திருத்தேசமே


பொங்கும் பல நதியுண்டு
எங்கும்நிறை அன்புண்டு
பச்சை நிற மேனிக்குள் எம்
பாரதத் திருத்தேசமே


ஆழிப் பெருங்கடல் முப்புறம் காக்க
ஆயப் பெருமலை மறுபுறம் நிற்க
தூய நெறி பல தன்னுள் கொண்ட தேசம்
பாரதத் திருத்தேசமே


தோல்நிரம் தொன் மொழி பேதங்கள் கொண்டிருந்தும்
அந்தணர் அரிசனர் வேற்றுமை தானிருந்தும்
பூந்தளிர் கேளீராய் மானிடர் வாழ்வதும்
பாரதத் திருத்தேசமே


அறவழி நெறிகொண்டு விடுதலை கொண்டதும்
வீரத்தின் வழிநின்று அறநெறிக் காப்பதும்
உயர்திணை மண்கொண்ட எம்
பாரதத் திருத்தேசமே


இமையத்தின் குளிரிலும் கடும்பாலையின் தகிப்பிலும்
இன்யுயிர் தந்து எம் நுண்ணுயிர் காக்கும்
வீரத்தின் புதல்வர்கள் பிறந்த தேசம்
பாரதத் திருத்தேசமே


கணிப்பொறி காலத்தில் அறிவியற் ஞானத்தில்
விண்தொட்ட விண்கலம் படைத்ததும்
நுன்னுன்னி உயிருக்குள் ஆய்வுகள் ஆண்டதுவும் எம்
பாரதத் திருத்தேசமே


இனி ஒருதேசம் என் தேசம் போல் வருமோ?
உள்செல்லும் சுவாசம் என் இந்தியக்காற்றைப் போல் தருமோ?
வாழிய என் தேசம் வளரட்டும் அதன் மீது நம் நேசம்...
_______________________________
உங்களில் ஒருவன் உங்களை பொங்கலில் வாழ்த்துகிறான்...




தை திருநாள்

ஊர்தோறும் தோரணங்கள்
மாவிலையில் காற்றாட.
தெருவெங்கும் மங்கையரின்
மாக்கோலம் மலர்தூவ,
வந்ததுவே தை திருநாள்!!!
தமிழ் மகிழும் ஓர் திருநாள்...

உணவுண்டு பிறர் வாழ,
சேரோடு கால் பதித்து
வியர்வையில் நிதம் குளித்த
உழவனின் உளமார,
வந்ததுவே தை திருநாள்!!!
தமிழ் உழவனின் ஓர் நன்னாள்...

மாவினத்தின் கொம்புகளில்
மலர்வண்ணம் அப்பிடவும்,
தமிழ் காளையரின் விரத்தில்
காளைகள் அடங்கிடவும்,
வந்ததுவே தை திருநாள்!!!
தமிழ் விரத்தை பாடிடும் நாள்..

யுகம் யுகமாய் பிரிந்துவிட்ட
கதிரவனும் நிலமகளும்
உளமார உறவாட,
கனிவோடு காதல் கொள்ள
வந்ததுவே தை திருநாள்!!!
தமிழ் வானத்தின் ஓர் மணநாள்..

வாண்டுகளின் வாய்களிலே கரும்பின் மனம்,
முதியோரின் வாழ்த்துகளில் வெற்றிலை நிறம்,
பங்காளி பகை மறந்த அன்பின் அறம், - இவையாவும் நல்கும்
எம் வீரத் தமிழினத்தின் ஓர் தினம்

கருவானம் காலை நிறம் பூசிக்கொள்ளும் நேரம்
காற்றோடு குயில்களும் கான மழைத் தூவும்
மன்சட்டி அடுப்பேற்றி, பச்சரசி அதிலிட்டு,
பொங்கிடும் பொங்கல் போல்,
ஒரேங்கும் தமிழ் மனம் பொங்கட்டும்
உலகெங்கும் எம் தமிழ் இனம் செழிக்கட்டும்

வந்ததுவே தை திருநாள்!!!
தமிழினத்தின் ஓர் பெருநாள்...



ஹைக்கூ கவிதைகள்

கலாச்சாரத்தின் கற்பழிப்பு,
காலதேவனின் ஆடை அவிழ்ப்பு
நாகரீகம்!!!

வரி வழியே அரசாங்கம் வாழ
குடி வழியே மக்களை கொள்ளும்
மலிவு விலை அநியாயக் கடை
டாஸ்மாக்!!!

என் அன்னைக்கு

3 comments:

rinkee said...

that sounds very nice bro.... nice pongal wishes .... keep rocking as ever ... love u brooo

Anonymous said...

Great Kavithai, awesome writing.. liked a lot - Usha

Anonymous said...

ஜெஜெ தோழரெ.... தங்களின் படைபுகள் மிக அற்புதம்..... நான் ரசித்த கவிதைகளிள் இது சிரப்பாக இருந்தது.. தங்களின் படைபுகள் தொடர வாழ்துகள்.. இன்பம்_வாண்டட்(inbam_wanted)