Pencil art by Cindrella...

Pencil art by Cindrella...

CINDRELLA'S KAVITHAI VARIGAL
நட்புக்கு நீ
கடலுக்கு அலை அழகு
அலைக்கு கரை அழகு
கரைக்கு பூங்கா அழகு
பூங்காவிற்கு பூக்கள் அழகு
பூக்களுக்கு மனம் அழகு
மனதிற்கு அன்பு அழகு
அந்த அன்பிற்கு
நண்பா உன்னை தவிர வேறு யார் அழகு !!!!
____________________________________________________
காதலே நீ
நமக்கு பிரிவு என்று வந்த பின்பும்
என் உயிர் மட்டும் இன்னும் பிரிய வில்லை
ஏன் என்று அறிவாயா,
என் சுவாசத்திலும் நீ மட்டுமே கலந்திருப்பதால் !!!
என் சுவாச காற்றே நீ என்றும்
என் மனத்திரையிலே தென்றலாய் இரு
புயலாய் வீசி என்னை விட்டு விலகி விடாதே !!!
___________________________________________________
கண் இமையிலும் நீ
என் கண்கள் இமைக்க கூட நான் விடுவதில்லை
ஏன் எனில் என் இமைகளுக்கு நடுவே நீ நிற்கிறாய்
நான் இமைக்கும் போது உனக்கு வலித்து விடுமே என்று
என் கண் இமைகள் இமைக்க கூட மறுக்கின்றன !!!!!
___________________________________________________
எதிரியும் எனக்கு நண்பனே
எனது கண்ணோட்டத்தில்
நண்பனும் எதிரியும் என் இரு கண்கள்
இரண்டில் ஒன்று இல்லாவிட்டாலும்
வாழ்க்கையின் பாதை குறுகி விடும்
நான் நண்பனை நேசிக்கிறேன்
எதிரியை நண்பனை விட நேசிக்கிறேன்
ஆச்சர்யமாக மனதில் படலாம்
ஆனால் அது முற்றிலும் உண்மை, ஏன் எனில்
நண்பன் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பான்
எதிரியோ வெற்றிக்கு காரணமாய் திகழ்வான் !!!
__________________________________________
கடல் - அன்னையும் நீயே.... தந்தையும் நீயே....
கடல் அன்னையை காண கடற்கரைக்கு சென்றேன்
நிலவின் ஒளியில் வெள்ளி ரதமாய் திகழ்ந்தாள்
அன்னையின் துரிதம் அவளிடமும் கண்டேன்
அவளது அன்பு அலையால்
என் பாதங்களை முத்தமிட்டாள்
ஆனந்தத்தில் திளைத்து இருந்தேன்...
அவளது காற்றாகிய தோழனை அழைத்து
என்மீது தென்றலாய் வீசச் செய்தாள்
மென்மையாக ஊடுருவியது
என் தந்தையின் பரிவை அதில் உணர்ந்தேன்...
என் தந்தையுமாய் அன்னையுமாய்
என்னுள் புகுந்தாள் அவள்
அப்போது தான் மனதில் தோன்றியது
இவ்வுலகில் யாரும் அனாதை இல்லை என்று !!!
_________________________________________
கடலுக்கும் காதலா
எனது தோழி கடற்கன்னி
எனது வருகைக்காக காத்திருந்தாள்
என்னை கண்டதும் தனது அலைகளால்
என்னை கட்டி அணைத்தாள்...
அவளை காணும்போது
அவள் கவலையாக காணப்பட்டால்
அவளது கவலை என்னுள் புகுந்தது
என் மனதையும் உயிரையும் வாட்டியது..
மழையான கண்ணீரை வடித்தாள்
நானும் அதில் நனைந்தேன்
கண்ணீருக்கு காரணம் கேட்டேன்
"காதல்" - என்று கூறினாள்
__________________________________
கடலின் காதலன்
கடற்கன்னி அவளது காதலனை தேடி
கடல் அலைகளாய் நீந்தி
கரையில் தினமும் அவனை தேடுகிறாள்...
அவன் இல்லாமல் போகவே
வாட்டத்துடன் கடலுக்கே திரும்புகிறாள்
எத்தனை காலங்கள் தேடுகிறாள்?
இன்னும் தேடி கொண்டே தான் இருக்கிறாள் ...
ஆர்ப்பரிக்கும் அலை ஓசைகள்
அவன் செவிக்கு சேரவில்லையா?
கேட்டும் கேட்காதவனாய் இருக்கிறானோ..
அவளது இதழ்கள் எத்தனை காலம் தான்
அதன் கரைகளையே முத்தமிடும்?
தன் காதலனை கண்டுக்கொண்டு
அவனை முத்தமிடுவது எப்போது ?
அவளது பொறுமையை இழந்து,
அவள் சுனாமியாக அவதரித்து,
மக்களின் உயிர்களை வேட்டையாடுவதற்குள்
அவளது உயிரை உனது உயிராக்கிக்கொள் ...
உனது வருகைக்கு காத்திருக்கிறாள் - கடற்கன்னி
________________________________________
பெண்ணின் அழகு
அழகாய் இருக்கும் ஒரு பெண்ணை
ஒரு நாளும் நேசிக்கவில்லை
அவன் நேசிப்பதால் தான்
அவள் அழகாக தோன்றுகிறாள் !!!
எந்த ஒரு பெண்ணின் அழகையும்
பெரழகாக்கும் திறன்
அவள் நேசிப்பவனிடம் இருக்கிறது
ஒரு சாதாரண பெண்ணும்
தேவதையாக தெரிவாள், அவளது
காதலன் கடைக்கண் பார்வை பட்டால் !!!
________________________________________________
பெண்ணின் பிறப்பு
பெண்ணின் பிறப்பு முதலில்
முட்களாக இல்லை தாயின் அரவணைப்பில்
மலர்களாக திகழ்ந்தது
லட்சக்கணக்கான அணுக்களில்
ஒரு அணு மட்டும் போராடி
தாயின் கருவறையில்
வெற்றியின் படியில்
சிசுவாக மாறுகிறாள் !!!
அவளது தாயின் கருவறையின்
இருட்டில் பத்து மாதங்கள் கழிக்கிறாள்
அப்போதே கடவுள் அவள் விதியில்
எழுதி விட்டாரா என்ன
அவளது வாழ்வும் இருட்டில் தான் என்று !!!
பத்தாம் மாதம் ஆரம்பித்து விட்டது
அவளது தாய் வலியால் துடித்தாள்
இன்பமான வலி ஏன் எனில்
அவள் பெற்று எடுத்தது
பூமி தாயின் மகளை !!!
அவளது தந்தை பூரித்தார்
தனக்கு பிறக்க விருப்பது ஆண் குழந்தை என்று
ஏழை தகப்பன் என்ன செய்வது ?
ஆனால் கடவுளின் திருவிளையாடல்
அவர் அப்போது அறியவில்லை
குழந்தை பெண்ணாக பிறந்தது
அவள் குற்றமா என்ன ?
பெண்ணின் தகப்பனே
பெண்ணுக்கு வில்லனானான்!!!
குழந்தையின் தாய் தன் மகளை
முத்தமிடும் முன்பே
கள்ளிப்பால் கரைத்தான் !!!
ஏன் பூமி தாயின் மகளாக இருந்தால்
பிறந்தபோதே
பூமிக்கு இரையாக வேண்டுமா என்ன ?
பெண்ணே நீ
பூமிக்கு இரையாகாமல்
பூமிக்கே இரைகொடுக்கும்
பாரதி கண்ட புதுமை பெண்ணாக
சிகரத்தை தொடுவாய் !!!
___________________________________________________
உயிர் காக்கும் உழவனுக்கு உயிர் எழுத்துகளில் ஒரு பா....
அணையில் தேக்கப்படும்
ஆற்று நீர் வெளிவரும்,
இரட்டிப்பு வேகத்தில்
ஈட்டியாய் பாய்ந்து
உதவும் விவசாயத்திற்கு...
ஊருக்கும் வயலுக்கும் நீர்ப்பாய்ச்சி
எருகளின் உதவியால்
ஏறு பூட்டி உழுது
ஐம்பூதங்களின் துணையோடும்
ஒவ்வொருவரின் உழைப்போடும்
ஓசை எழுப்பும் பாடல் பாடி
ஒளவை அகவையிலும் உழைக்கிறான் விவசாயி...
__________________________________________
காதல் பிரிதல்
என் கண்மணியே
கண்களின் கருவிழியினுள் நுழைந்து
என் மனதினுள் உன் வடிவத்தை நுழைத்து
என் மூச்சு காற்றினை உனதாக்கிக் கொண்டு
என்னுள் நீ சரண் புகுந்தாய்
எந்தன் மனத்திரையில்
உன் வடிவத்தை காணும் நான்
மணம் கிறங்கி காதல் கிறுக்கன் ஆனேன்
என்னை உன்னவன் ஆக்கிக்கொண்ட நீ
உன்னவனை விட்டு விலகுவது ஏன் ??
___________________________________
இதயத்தின் ஊஞ்சல்
என் இதயக் கனியே
என் இதயம் என்ன
விளையாட்டு மைதானமா?
நீ என்றும் ஊஞ்சல் கட்டி ஆட ??
என் கண்ணின் மணியே
நீ நித்தம் ஊஞ்சல் ஆடுவதை
என்றேனும் நிறுத்தினாய் என்றால்
நிறுத்தும் உன் ஆட்டத்தில்
நின்றுவிடும் என் ஓட்டம்
____________________________
அன்பின் மகிமை
பிறர் உன்னை நேசிக்கும் போது
நீ நேசிப்பதை விட
பிறர் உன்னை வெறுக்கும் போதும்
நீ நேசிப்பது தான்
உண்மையான அன்பு
அன்பு எல்லையற்றது
காலம் கடந்தது
இரு மனங்களின் சங்கமமே
அன்பின் வெளிபாடு
பிரிந்த இரு மனமும்
வெவ்வேறு திசையில் சென்றாலும்
அவர்களை ஒரே திசையில்
கொண்டு வரும் சக்தி அன்பிற்கு உண்டு
தூய்மையான அன்புக்கு
என்றும் எதிரிகள் கிடையாது
அவர்களே எதிரிகள்
என்று கருதும் வரையில்
____________________________
நட்பின் புரிதல்...
நண்பன் உன்னை புரிந்து கொண்டானா
என்பதை விட
நீ அவனை புரிந்து கொண்டாயா
என்பதை பார்
அவன் உன்னை புரிந்து கொள்ள வில்லை
என்று எண்ணி
நீ அவனை புரிந்து கொள்ளாமல்
பிரிந்து விடாதே தோழி
_____________________________________
16 comments:
Cinderella!! Your paintings are soooo awesome!! specially the 3rd one...it's got such a still life..amazing... keep posting more!!! :D
- LuvMyth
Great Cindrella.... Amazing and Wonderful paintingsssss... Congrats and keep Rocking... A Special thanks for ur poems..... Aspire5572
enaku potiya cindrella va :))
and ur paitings are awesome/... keep rocking...
autokaga oru poto varum endru ethir parkiran....
hiiiiiiii cindrella,,,really unge paiting is so super,,,nice...keep it up..
நான் வாசித்து
என் மனதை
சிலிர்க்க வைத்த
மிகச் சில
கவிதைகளை காட்டிலும்
உன்
கவிதைகள்
உள்ளதை ஊடுருவி
உணர்வை பொங்கச்
செய்கிறதே தோழி
சின்ட்ரெல்லா .....
தொடரட்டும் உன்
கவிதைகள் ....
வளரட்டும் நம்
நட்பு ...
வளமாகட்டும் உன்
வாழ்வு...
என் மனம் உன்னை
மனதார வாழ்த்துகிறது...
Aspire 5572...
hi cindy,
Is this really ur paintings? wow awesome,fantabulous,great,superb and no more words for me to say..tell me something r u a proffessional painter or ?...just a part time.u hv a gr8 future..kai tholil readya iruku ungaluku.
Hey.. cinderlla,
ur paintings and ur poems are really awesome.. and keep rocking..... aishu :)
hi if u pls.. tell these poems in main room.. many dont know to read tamil.. rather they speak.. nice paintings.. hats off
Cindrella
Natpai patri ore varthail kavithai solla sonnal athu NAM......
Ore eluthil solla sonnal athu Ni da :)
Keep rocking :)
HI CINDY.....UR PAINTINGS R SUPERB .....I JUST FEEL LIKE GIVING U A BIG HUG FOR THE WONDERFUL JOB U HV DONE....GREAT WORK DEAR...KEEP POSTING MORE PAINTINGS N GIVE US ALL SOME SUGGESTIONS SO THAT EVEN WE WILL ALSO START PAINTING..."MONEY CANT BUY U LOVE, BUT IT CAN BUY U CHOCOLATES" I WISH I CAN GIVE U CHOCOLATES FOR THE GOOD JOB DONE..ABT THE POEMS I CANT READ TAMIL SO I REALLY DONT KNOW ....
wondrful painthings and pencil art cindy.....keep it up.....reeena84
congrats .... u have won post of the month... keep rocking and winning
really ur paintings made me 2 say wow. it is fantastic... At the same time ur poet is also good.. "NALLAVARGAL KUDA THOTRU POGALAM; AANNAAL NAMBIKAI ULLAVARGAL ORU POTHUM THORPATHILLAI" I wish u all success in ur life...
I wish u to enjoy each and every second ,not only this year but also for the entire life time.
by
valiban
Happy Birthday Cindy....reeena84
Hi Cindrella, Let all the Success be at your Side, you rock for ever :) Aspire5572
Post a Comment